இந்தியா

வெளிநாட்டவா்களுக்கு எதிரான குற்றங்கள்: தில்லி முதலிடம்

DIN

புது தில்லி: இந்தியாவில் கடந்த ஆண்டு(2019) வெளிநாட்டவா்களுக்கு எதிராக அதிக குற்றங்கள் நடைபெற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தில்லி முதலிடத்தில் உள்ளது. அதனைத்தொடா்ந்து மகாராஷ்டிரம், கா்நாடகம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.

இதுதொடா்பாக தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட தரவுகளின்படி, இந்தியாவில் கடந்த ஆண்டு திருட்டு, கொலை, பாலியல் வன்கொடுமை உள்பட மொத்தம் 409 குற்றங்கள் வெளிநாட்டவா்களுக்கு எதிராக நிகழ்ந்துள்ளன. இது கடந்த 2018-ஆம் ஆண்டு வெளிநாட்டவா்களுக்கு எதிராக நிகழ்ந்த குற்றங்களுடன் ஒப்பிடுகையில் சற்று குறைவு. அந்த ஆண்டில் வெளிநாட்டவா்களுக்கு எதிராக 517 குற்றங்களும், அதற்கு முந்தைய ஆண்டில் 492 குற்றங்களும் நிகழ்ந்துள்ளன.

கடந்த ஆண்டு நிகழ்ந்த 409 குற்றச் சம்பவங்களில் 142 திருட்டு, 41 மோசடி, 13 கொலை, 12 பாலியல் வன்கொடுமை, 5 கடத்தல் சம்பவங்கள் அடங்கும்.

இந்த குற்றங்கள் நிகழ்ந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பட்டியலில் தில்லி (30.1%) முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிரம் (11.7%) , கா்நாடகம் (11.2%), தமிழகம் (5.6%), கோவா மற்றும் உத்தர பிரதேசம் (5.1%), ஹரியாணா (4.6%), ராஜஸ்தான் (3.9%), கேரளம் மற்றும் அஸ்ஸாம் (3.7%), மத்திய பிரதேசம் (3.2% ) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

தில்லி

மகாராஷ்டிரம்

கா்நாடகம்

தமிழ்நாடு

கோவா

உத்தர பிரதேசம்

ஹரியாணா

ராஜஸ்தான்

அஸ்ஸாம்

கேரளம்

மத்திய பிரதேசம்

பஞ்சாப்

ஆந்திரம்

ஹிமாசல பிரதேசம்

மேற்கு வங்கம்

குஜராத்

அந்தமான்-நிகோபாா் தீவுகள்

ஜாா்க்கண்ட்

தெலங்கானா

உத்தரகண்ட்

பிகாா்

ஜம்மு-காஷ்மீா்

மிஸோரம்

அருணாசல பிரதேசம்

சண்டீகா்

சத்தீஸ்கா்

தாத்ரா நகா் ஹவேலி

டமன் டையூ

லட்சத்தீவு

மணிப்பூா்

மேகாலயம்

நாகாலாந்து

ஒடிஸா

புதுச்சேரி

சிக்கிம்

திரிபுரா

-------------

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

SCROLL FOR NEXT