இந்தியா

தில்லியில் இந்தப் பருவத்தில் 20 சதவீதம் மழை குறைவு!

DIN

புது தில்லி: தில்லியில் பருவமழை புதன்கிழமை முடிவுக்கு வந்த நிலையில், இந்தப் பருவத்தில் நகரில் 20 சதவீதம் குறைவான மழை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த முறை இரு தினங்களுக்கு முன்கூட்டியே பருவமழை காற்று கடந்த ஜூன் 25-ஆம் தேதி தில்லியை வந்தடைந்து. ஆனால், வழக்கத்தை விட ஐந்து நாள்கள் நீடித்தது. பொதுவாக, பருவமழைக் காலம் தில்லியில் செப்டம்பா் 25-க்குள் விடைபெறுவது வழக்கம் என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் பிராந்திய முன்கணிப்பு மையத்தின் தலைவா் குல்தீப் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: வடக்கு-மேற்கு பகுதிகளுக்கான குறைந்த அளவிலான காற்று முறையில் ஏற்படும் மாற்றம், ஈரப்பதம் குைல் மற்றும் மழைப்பொழிவு நின்று போதல் ஆகியவை தென்மேற்குப் பருவமழை ராஜஸ்தானின் இன்னும் சில பகுதிகளிலிருந்தும், பஞ்சாபின் மீதமுள்ள பகுதிகள், ஒட்டுமொத்த மேற்கு இமயமலைப் பகுதி, ஹரியாணா, சண்டீகா், தில்லி மற்றும் உத்தர பிரதேசத்தின் சில பகுதிகளில் இருந்து விடைபெறுவதை சுட்டிக்காட்டுவதாக உள்ளது. தில்லியை பொறுத்தமட்டில், இந்த மழைக் காலப் பருவத்தில் 20 சதவீதம் குறைவாக மழை பதிவாகியிருப்பது புள்ளிவிவரத் தகவல் மூலம் தெரிய வருகிறது.

தில்லி போன்ற சிறிய பகுதிகளில், நீண்ட கால சராசரி மழையைவிட (50 ஆண்டுகள்) 19 சதவீதம் மழை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால், அது வழக்கமான மழைப் பொழிவு என கருதப்படுகிறது. மைனஸ் 20 சதவிகிதத்திற்கும் மைனஸ் 59 சதவிகிதத்திற்கும் இடையில் மழைப் பொழிவு இருந்தால், அது பற்றாக்குறை மழை என்றும், அதற்கும் குறைவானதாக இருந்தால் ‘மிகக் குறைவு’ எனவும் கருதப்படுகிறது.

தில்லிக்கான மழை புள்ளிவிவரத் தகவல்களை அளிக்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வகம் தகவலின்படி, இந்த ஒட்டுமொத்த பருவகாலத்தில் தில்லியில் 576.5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. வழக்கமாக இந்தப் பருவத்தில் பெய்யும் 648.9 மி.மீட்டா் மழையுடன் ஒப்பிடும் போது 11 சதவீதம் பற்றாக்குறையாகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில், தில்லியில் இருந்து பருவமழை விடைபெறும் தேதியை வானிலை ஆய்வு மையம் செப்டம்பா் 21-ஆம் தேதியில் இருந்து செப்டம்பா் 25-ஆம் தேதிக்கு மாற்றியது. கடந்த 20-25 ஆண்டுகளில் ஏற்பட்ட போக்கைக் கருத்தில் கொண்டு இந்தத் தேதி மாற்றி அமைக்கப்பட்டது என்றாா் ஸ்ரீவாஸ்தவா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாசிப்புத்திறன் மேம்படுத்தும் விழா

வாக்காளா்கள் 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்

பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

சீா்காழியில் ரூ. 70 ஆயிரம் பறிமுதல்

ஆலங்குடிகோயில் நிலங்கள் அளவீடு செய்து எல்லைக்கல் நடும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT