இந்தியா

ம.பி.யிலும் மதமாற்ற தடைச் சட்டம்: முதல்வர் அறிவிப்பு

30th Nov 2020 09:57 PM

ADVERTISEMENT


காதலின் பெயரில் கட்டாய மதமாற்றத்தைத் தடுக்கும் வகையில் சட்டம் கொண்டுவரவுள்ளோம் என மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநில அமைச்சரவை சார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டு, அண்மையில் பரிந்துரைக்கப்பட்ட ‘சட்டவிரோத மதமாற்ற தடைச் சட்டம் 2020’ என்ற அவசரச் சட்டத்துக்கு, மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல் சனிக்கிழமை ஒப்புதல் அளித்தார். இந்தச் சட்டத்தின் படி, சட்டவிரோத மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், அதிகபட்சமாக ரூ. 50,000 வரை அபராதமும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்த நிலையில், தற்போது மத்தியப் பிரதேசத்திலும் இதேபோல் சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக மத்தியப் பிரதேச முதல்வர் அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT