இந்தியா

மாடர்னா தடுப்பூசி 100 சதவிகிதம் பலன் தருகிறது: தயாரிப்பு நிறுவனம்

30th Nov 2020 09:33 PM

ADVERTISEMENT


கரோனா தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதில் 100 சதவிகிதம் பலன் தருவதாக மாடர்னா நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாடர்னா நிறுவனம், கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான தடுப்பூசியைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. கடைசி கட்ட ஆய்வின் முழு முடிவுகளுக்குப் பிறகு, தடுப்பூசி 94.1 சதவிகிதம் பலன் தருவதாக மாடர்னா நிறுவனம் தெரிவித்துள்ளது. மாடர்னா தடுப்பூசியின் செயல்திறன் விகிதம் வயது, இனம், மற்றும் பாலினம் என அனைவருக்கும் சீராகவே உள்ளது என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் நோய்த் தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களை மாடர்னா தடுப்பூசி 100 சதவிகிதம் பாதுகாப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, மாடர்னா தடுப்பூசியை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் அவசர கால பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான அனுமதியை அந்நிறுவனம் கோரவுள்ளது.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT