இந்தியா

திட்டவட்டமான முடிவுக்காகவே தில்லி வந்துள்ளோம்: விவசாயிகள்

30th Nov 2020 06:44 PM

ADVERTISEMENT


வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் திட்டவட்டமான ஒரு முடிவுக்காகவே தில்லி வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு இயற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தில்லியில் கடந்த 5 நாள்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் திங்கள்கிழமை மாலை விவசாயிகள் தரப்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது விவசாயிகள் பிரதிநிதி ஒருவர் தெரிவித்ததாவது:

"எங்களது 'மனதின் குரலை' பிரதமர் நரேந்திர மோடி கேட்க வேண்டும். எங்கள் கோரிக்கைகள் பேசித் தீர்க்கக் கூடியவை அல்ல. எங்களது பிரச்னைகளுக்கு செவிசாய்க்கவில்லை என்றால் அவர்கள் பெரிய விளைவைச் சந்திக்க நேரிடும். ஒரு திட்டவட்டமான முடிவுக்காகவே நாங்கள் இங்கு வந்துள்ளோம்" என்றார்.

ADVERTISEMENT

மற்றொரு விவசாயத் தலைவர் குர்னம் சிங் தெரிவித்ததாவது:

"போராட்டத்தை ஒடுக்குவதற்காக போராட்டக்காரர்கள் மீது சுமார் 31 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை விவசாயிகள் போராட்டம் தொடரும்" என்றார் அவர்.

முன்னதாக டிசம்பர் 3-ம் தேதிக்குள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற அமித் ஷாவின் நிபந்தனையை 30 விவசாயக் குழுக்கள் ஞாயிற்றுக்கிழமை நிராகரித்தன. மேலும் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : farmers
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT