இந்தியா

கரோனா வைரஸ் இந்தியாவில் தோன்றியிருக்கலாம்: சீனா 

DIN

கரோனா வைரஸ் இந்தியாவில் தோன்றியிருக்கலாம் என்று சீன ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருப்பதாக அந்நாடு குற்றம்சாட்டியுள்ளது.

கரோனா தொற்றால் உலக நாடுகள் பெரும் உயிரிழப்பையும், பொருளாதார சீரழிவையும் சந்தித்து வரும் நிலையில், கரோனா வைரஸ் எங்கு தோன்றியிருக்கும் என்பதை கண்டறியும் ஆய்வை உலக சுகாதார நிறுவனம் முன்னெடுத்துள்ளது.

கரோனா தொற்று எங்கு தோன்றியிருக்கக் கூடும் என்பதை அறிய உலக சுகாதார நிறுவனம் சீனாவுக்கு தனது ஆராய்ச்சியாளர்களை அனுப்பி ஆய்வு செய்ய முன்னெடுத்திருக்கும் நிலையில், தங்களது ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பில், கரோனா வைரஸ் இந்தியாவில் தோன்றியிருக்கலாம் என்று தெரிய வந்திருப்பதாக சீனா கட்டுக்கதையை அவிழ்த்துவிட்டுள்ளது.

இதுவரை இத்தாலியில் தோன்றியிருக்கலாம், அமெரிக்காவில் கூட உருவாகியிருக்கலாம், ஐரோப்பாவில்தான் வைரஸ் தோன்றியது என்று பல்வேறு கட்டுக்கதைகளைக் கூறி வந்த சீன விஞ்ஞானிகள், இன்று இந்தியாவை நோக்கி தங்களது ஆள்காட்டி விரலை நீட்டியுள்ளனர்.

அதாவது, சீனாவில் உள்ள அறிவியல் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியில், கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூலை முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான கோடைக்காலத்திலேயே இந்தியாவில், கரோனா தொற்று உருவாகியிருக்கலாம் என்றும், இந்தியாவில் கடுமையான கோடைக்காலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு, விலங்குகளும், மனிதர்களும் சுகாதாரமற்ற குடிநீரையே பகிர்ந்து கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கும். அப்போது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு கரோனா தொற்று பரவியிருக்கும். ஆனால் அது கண்டுபிடிக்கப்படாமலேயே சீனாவுக்கு தொற்றி வந்து, பிறகு வூஹானில் முதல் முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

கரோனா தொற்று மனிதர்களுக்குப் பரவிய விதம் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் கிடைத்த முடிவுகள், வூஹானில் உள்ள இறைச்சிச் சந்தை மூலமாக கரோனா தொற்று பரவியதாக இதுவரைக் கூறப்பட்டு வந்த தகவல்களை எல்லாம் தவிடுபொடியாக்கிவிடும் வகையில் நன்கு புனைவுகள் செய்யப்பட்டுள்ளது.

அது மட்டுமல்ல, கரோனா வைரஸ் வூஹான் நகரில்தான் முதன் முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டது என்றால், அது அங்குதான் உருவாகியிருக்கக் கூடும் என்பது அர்த்தமல்ல என்றும் மிகத் தெளிவாக விளக்கம் கொடுத்தும் உள்ளனர்.

ஏற்கனவே, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சீனாவுக்கு இறக்குமதி செய்யப்படும் மீன் பாக்கெட்டுகளில் கரோனா வைரஸ் இருந்ததற்கான சுவடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக, சீனா குற்றம்சாட்டிவந்த நிலையில், தற்போது, கரோனா வைரஸ் இந்தியாவில்தான் கண்டுபிடிக்கப்பட்டதாக பகிரங்கக் குற்றச்சாட்டை எடுத்து வீசியுள்ளது.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டை உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை என்பதும் நன்கறிந்ததே.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிதமான சரிவைக் கண்ட சா்க்கரை உற்பத்தி

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது

குணசீலம் பிரசன்ன வேங்கடாஜலபதி கோயிலில் தெப்ப உற்சவம்

ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் இறங்கி கஜேந்திர மோட்சம் அளித்த நம்பெருமாள்

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: 89 தொகுதிகளில் பிரசாரம் இன்று நிறைவு

SCROLL FOR NEXT