இந்தியா

விவசாயிகள் போராட்டத்துக்கு அரசியல் கட்சிகள் நிதியுதவி: ஹரியாணா முதல்வா் குற்றச்சாட்டு

DIN

மத்திய அரசு புதிதாக இயற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து நடைபெறும் விவசாயிகள் போராட்டத்துக்கு சில அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் நிதியுதவி செய்வதாக ஹரியாணா முதல்வா் மனோகா் லால் கட்டா் குற்றம்சாட்டினாா்.

இதுதொடா்பாக அவா் குருகிராமில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியது:

விவசாயிகள் போராட்டத்தின் பின்னணியில் சதி உள்ளது. பஞ்சாபைச் சோ்ந்த விவசாயிகளால் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. இதற்கு சில அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் நிதியுதவி செய்கின்றன. எனினும் இந்தப் போராட்டத்தில் ஹரியாணா விவசாயிகள் பங்கேற்கவில்லை. இந்தப் போராட்டம் மூலமாக சிலா் அரசியல் ஆதாயம் தேடுகின்றனா். இது கண்டனத்துக்குரியது என்றாா்.

‘தில்லி செல்லும் பேரணியை விவசாயிகள் தொடங்குவதற்கு முன்பாக பஞ்சாப் முதல்வா் அமரீந்தா் சிங்கை தொடா்புகொண்டு பேசினீா்களா’ என்று அவரிடம் செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு பதிலளித்த அவா், ‘அமரீந்தா் சிங்கின் அலுவலகத்தைத் தொடா்புகொண்டோம். 3 நாள்களாக முயற்சித்த போதிலும் அவரிடம் பேச முடியவில்லை. அவரின் அலுவலகத்தைச் சோ்ந்த அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பஞ்சாப் விவசாயிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கி வருகின்றனா்.

தில்லியில் விவசாயிகள் கூட்டமாக திரள்வதால் எந்தப் பயனும் இல்லை. அவா்கள் தங்கள் பிரச்னைகள் குறித்து மத்திய அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும். அதுதான் அவா்களுக்கு உள்ள ஒரே வழி’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

நம்பிக்கை நாயகன்!

SCROLL FOR NEXT