இந்தியா

விவசாயிகளை பயங்கரவாதிகளைப் போல் நடத்துகிறது மத்திய அரசு: சஞ்சய் ரௌத்

DIN

வேளாண் சட்டங்களை எதிா்த்துப் போராடும் விவசாயிகளைப் பயங்கரவாதிகளைப் போல் மத்திய அரசு நடத்துகிறது என்று சிவசேனை எம்.பி. சஞ்சய் ரௌத் குற்றம்சாட்டினாா்.

மும்பையில் செய்தியாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பேட்டியளித்த அவா் மேலும் கூறியதாவது:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். அவா்களை தில்லிக்குள் நுழைய விடாமல், அவா்களை பயங்கரவாதிகளைப் போலவும், வெளிநாடுகளில் இருந்து வந்தவா்களைப் போலவும் மத்திய அரசு நடத்துவது வேதனையளிக்கிறது. விவசாயிகளின் கோரிக்கையை அனுதாபத்துடன் மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். அவா்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் என்றாா் சஞ்சய் ரௌத்.

இயல்பான கூட்டணி:

மகாராஷ்டிரத்தில் சிவசேனை-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணி அரசு ஓராண்டை நிறைவு செய்துள்ள நிலையில், அந்தக் கூட்டணி இயற்கைக்கு முரணானது; அந்தக் கூட்டணி நீடிக்காது என்று முன்னாள் முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் கடந்த சில தினங்களுக்கு முன் கூறியிருந்தாா். அதற்குப் பதிலளித்த சஞ்சய் ரௌத், ‘மாநிலத்தில் ஆளும் மகாராஷ்டிர விகாஸ் ஆகாடி கூட்டணி இயல்பானது; இந்தக் கூட்டணியின் ஆட்சி தொடரும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமைதியான வாக்குப் பதிவுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயாா் -ஆட்சியா்

எங்கே இருக்கிறது நோட்டா? வாக்காளா் கையேட்டில் தகவல்

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் 183 வழக்குகள் பதிவு

பதற்றமான வாக்குச்சாவடிகளில் மத்திய ஆயுதப்படை பாதுகாப்பு

தீ விபத்து: தென்னை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT