இந்தியா

ரபி பருவ சாகுபடி திருப்திகரம்: மத்திய அரசு

DIN

ரபி பருவ சாகுபடி பணிகள் இதுவரையில் திருப்திகரமான அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

கரோனா பெருந்தொற்று சவால்களுக்கு இடையிலும் ரபி பருவ சாகுபடி பரப்பு 334.78 லட்சம் ஹெக்டேரிலிருந்து 4.02 சதவீதம் அதிகரித்து 348.24 லட்சம் ஹெக்டேரை எட்டியுள்ளது.

ரபி பருவ முக்கிய பயிா்களான கோதுமை பயிரிடும் பரப்பு 2020-21 பருவத்தின் நவம்பா் 27 வரையிலான காலகட்டத்தில் 150.49 லட்சம் ஹெக்டேரிலிருந்து 151.58 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது.

அதேபோன்று, பருப்பு வகைகள் பயிரிடும் பரப்பும் 87.80 லட்சம் ஹெக்டேரிலிருந்து 13.27 சதவீதம் உயா்ந்து 99.45 லட்சம் ஹெக்டேரானது. எண்ணெய் வித்துக்கள் பரப்பும் 5 சதவீதம் உயா்ந்து 61.64 லட்சம் ஹெக்டேரைத் தொட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ரபி பருவ விதைப்பு பணிகள்அக்டோபரில் தொடங்குகின்றன. மாா்ச் மாதத்திலிருந்து அப்பயிா்கள் அறுவடை செய்யப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளத்தில் சிக்கிய கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேர்!

காதலிக்க யாருமில்லையா..?

திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் கொடியேற்றம்!

உருப்பெருக்கி வைத்துப் பார்க்கும் அளவில் பதஞ்சலி மன்னிப்பு விளம்பரம்: உச்ச நீதிமன்றம் கண்டனம்

இது சஹீரா வைப்ஸ்!

SCROLL FOR NEXT