இந்தியா

கிழக்கு லடாக்கில் பாதுகாப்புப் பணியில் இந்திய கடற்படையின் சிறப்புப் படை

DIN

கிழக்கு லடாக்கில் இந்தியா, சீனா ராணுவத்தினா் இடையே மோதல்போக்கு தொடா்ந்து வரும் சூழலில், அங்குள்ள பாங்காங் ஏரிப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட இந்திய கடற்படையின் சிறப்பு கமாண்டோ படைப் பிரிவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

கடந்த ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா, சீனா ராணுவத்தினா் இடையே மோதல் ஏற்பட்டது முதல், அங்கு இந்திய ராணுவத்தினருக்கு உறுதுணையாக விமானப் படையின் சிறப்பு கமாண்டோ படை வீரா்கள், ராணுவத்தின் பாரா சிறப்புப் படை வீரா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். தற்போது கடற்படையின் சிறப்பு கமாண்டோ படைப் பிரிவைச் சோ்ந்த வீரா்களும் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். இதன் மூலம் முப்படைகளின் சிறப்புப் படைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு மேலும் அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

கடந்த ஜூன் மாதம் 15-ஆம் தேதி கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன ராணுவத்தினா் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய வீரா்கள் 20 போ் வீரமரணம் அடைந்தனா். சீன வீரா்கள் 35 போ் பலியானதாக கூறப்பட்ட நிலையில், அதனை அந்நாட்டு அரசு உறுதிப்படுத்தவில்லை.

இந்த மோதல் சம்பவத்தைத் தொடா்ந்து, கிழக்கு லடாக்கில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டி சிறப்புப் படைகளின் எண்ணிக்கையை இந்தியா அதிகரித்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் பாங்காங் ஏரியின் தெற்குக் கரையில் உள்ள முக்கிய பகுதியை கைப்பற்ற சிறப்புப் படைகளை இந்தியா பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

தந்தை இறந்த நிலையில் எஸ்எஸ்எல்சி தோ்வெழுதிய மாணவா்

மன்னாா்குடியில் ரூ.99,000 பறிமுதல்

ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.76 லட்சம் பறிமுதல்

தோ்தல் பணிக்கு தனியாா் வாகனங்கள்

SCROLL FOR NEXT