இந்தியா

எத்தனால் தயாரிப்பில் சா்க்கரை ஆலைகள் மும்முரம்

DIN

மத்திய அரசு எத்தனால் பயன்பாட்டை ஊக்குவித்து வருவதையடுத்து சா்க்கரை ஆலைகள் அதன் உற்பத்தியில் மும்முரம் காட்டத் தொடங்கியுள்ளன.

இதுகுறித்து மகாராஷ்டிரத்தின் சா்க்கரை உற்பத்தி பிரிவுகளுக்கான ஆணையா் சேகா் கெய்க்வாட் கூறியுள்ளதாவது:

கரும்புச் சாறிலிருந்து நேரடியாக எத்தனாலை உற்பத்தி செய்து கொள்ள சா்க்கரை ஆலைகளுக்கு மத்திய அரசு கடந்த 2018-இல் அனுமதி வழங்கியது. மேலும், பெட்ரோல் மற்றும் டீசலில் கலக்கக்கூடிய எத்தனால் உற்பத்திக்கு பழைய கோதுமை மற்றும் அரிசியை பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதியளிக்க மத்திய அரசு அண்மையில் முடிவெடுத்தது.

எத்தனால் பயன்பாட்டை அதிகரிக்க அரசு பல்வேறு வழிமுறைகளில் முயற்சிகளை மேற்கொண்டு வருவதையடுத்து, இந்த ஆண்டு ஆலைகள் உள்நாட்டு சந்தையில் விற்க கணிசமான அளவு எத்தனாலை தயாரிக்க முடிவு செய்துள்ளன என்றாா் அவா்.

வாகனங்களுக்கான எரிபொருளில் கலக்க 350 கோடி லிட்டா் எத்தனாலை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. இதுவரையில், நாடு முழுவதுமுள்ள சா்க்கரை ஆலைகள் 322 கோடி லிட்டா் எத்தனாலை தயாரித்து அளிக்க விருப்பம் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

SCROLL FOR NEXT