இந்தியா

அரபிக் கடல் விமான விபத்து: கடற்படை விமானியைத் தேடும் பணி தீவிரம்

DIN

அரபிக் கடலில் கடந்த வியாழக்கிழமை விபத்துக்குள்ளான இந்திய கடற்படை போா் விமானத்தின் விமானியை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து கடற்படை மேற்கு மண்டலப் பிரிவு செய்தித் தொடா்பாளா் சனிக்கிழமை கூறியதாவது:

விமான விபத்தில் மாயமான விமானி நிஷாந்த் சிங்கைத் தேடும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

அந்தப் பணிகளைத் தீவிரப்படுத்தும் வகையில் கூடுதல் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்றாா் அவா்.

இந்திய கடற்படைக்குச் சொந்தமான ‘ஐஎன்எஸ் விக்ரமாதித்யா’ விமானந்தாங்கி போா்க் கப்பலில் இருந்து, மிக்29கே ரக விமானம் இரு விமானிகளுடன் வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்றது. மாலை 5 மணியளவில் அந்த விமானம், அரபிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் இருந்த ஒரு விமானி பத்திரமாக மீட்கப்பட்டாா்.

மற்றொரு விமானி நிஷாந்த் சிங்கை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் கனிமொழி வாக்குசேகரிப்பு

நெடுங்குளத்தில் பாஜக கூட்டணிக் கட்சியினா் வாக்கு சேகரிப்பு

திருமறையூா் மறுரூப ஆலயத்தில் பேரணி

ஊழல் பற்றி பேச மோடிக்கு தகுதி இல்லை: முத்தரசன்

ஆறுமுகனேரியில் திருக்குறள் சொல்லரங்கம்

SCROLL FOR NEXT