இந்தியா

விவசாயிகளைப் போராட அனுமதித்தது ஏன்?: பஞ்சாப் அரசுக்கு கேள்வி

29th Nov 2020 05:03 PM

ADVERTISEMENT

கரோனா அச்சுறுத்தலுக்கிடையே விவசாயிகளை பஞ்சாப் அரசு போராட அனுமதித்தது ஏன் என்று ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே தில்லி நோக்கி விவசாயிகள் பேரணியாகச் சென்று தலைநகரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே பஞ்சாப் விவசாயிகள் ஹரியாணா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டது முதலே இரு மாநில முதல்வர்களிடையேயும் மோதல் போக்கு நீடித்து வருகிறது.

சுட்டுரையில் இருவரும் ஒருவருக்கொருவர் பதிலடிகொடுத்து வந்த நிலையில், விவசாயிகள் பிரச்னை குறித்து பேசுவதற்காக தொலைபேசி வாயிலாக அழைத்ததாகவும், ஆனால் அதனை பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் மறுத்ததாகவும் ஹரியாணா முதல்வர் கட்டார் தெரிவித்திருந்தார். இதற்கு பஞ்சாப் முதல்வர் மறுப்பு தெரிவித்து, கட்டார் பொய்யுரைப்பதாக விமர்சித்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில் இது குறித்து பேசிய ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார், கரோனா அச்சுறுத்தல் தொடர்ந்து வரும் நிலையில், விவசாயிகள் போராட்டத்திற்கு பஞ்சாப் அரசு இப்போது ஏன் அனுமதியளித்துள்ளது. கரோனா வைரஸ் காரணமாகவே ஹரியாணா எல்லையில் மக்கள் கூடுவதற்கு அனுமதியளிக்கவில்லை. கண்ணீர் புகைக்குண்டுகளையும், தண்ணீரைப் பீய்ச்சியடிப்பதையும் நாங்கள் பலமாகக் கருதவில்லை என்று கூறினார்.

கரோனாவால் இக்கட்டான சூழல் ஏதும் ஏற்பட்டால், அதற்கு பஞ்சாப் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். இது குறித்து பஞ்சாப் முதல்வருடன் பேசுவதற்கு முயற்சி செய்தேன். ஆனால் அவர் எனது தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை என்று தெரிவித்தார்.

Tags : Manohar Lal Khattar
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT