இந்தியா

பாஜகவிலிருந்து வெளியேறிய யாரும் நிம்மதியாக வாழ்ந்ததில்லை: சுஷில் மோடி

29th Nov 2020 10:00 PM

ADVERTISEMENT


பாஜகவிலிருந்து வெளியேறிய யாரும் நிம்மதியாக வாழ்ந்ததில்லை என பிகார் முன்னாள் துணை முதல்வரும் பாஜக தலைவருமான சுஷில் மோடி தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் பேசியதாவது:

"பாஜக ஒருவழிப் பாதை மாதிரி. பாஜகவுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால், இங்கிருந்து யாரும் போக முடியாது. பாஜகவிலிருந்து வெளியேறியவர்கள் யாரும் நிம்மதியாக வாழ்ந்ததில்லை. நான் பிகார் அரசின் அங்கமாக இல்லாதபோதும், எனது ஆன்மா பிகார் அரசினுள்தான் இருக்கிறது. நமது கட்சியை நாம் வலுவிழக்க விடக் கூடாது" என்றார் அவர்.

பிகார் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, துணை முதல்வராக இருந்த சுஷில் மோடிக்கு மீண்டும் துணை முதல்வர் பதவி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

Tags : bjp
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT