இந்தியா

ஹைதராபாத் பெயரை மாற்றுவோம்: ஒவைஸி கண்டனம்

DIN

ஹைதராபாத்:  ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் பிரசாரத்தில்,  உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஹைதராபாத்தை பெயரை பாக்யநகராகப் பெயர் மாற்றுவோம் என்று பேசியதற்கு மஜ்லீஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைஸி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

தெலங்கானா தலைநகா் ஹைதராபாத் மாநகராட்சிக்கான தோ்தல் வரும் டிசம்பா் மாதம் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கான வாக்கு சேகரிப்பில் பாஜக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்  ஈடுபட்டாா். அப்போது அவா் பேசியதாவது:

"ஹைதராபாத்தை பாக்யநகராகப் பெயர் மாற்ற முடியுமா என்று சிலர் என்னிடம் கேள்வி எழுப்புகின்றனர். ஏன் மாற்ற முடியாது? உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் பைசாபாத்தை அயோத்தி என்றும் அலகாபாத்தை பிரயக்ராஜ் என்றும் நாங்கள் பெயர் மாற்றம் செய்தோம். அப்படி இருக்கையில் ஹைதராபாத் ஏன் பாக்யநகர் என்று பெயர் மாற்றம் செய்ய முடியாது?" என்றார் யோகி ஆதித்யநாத்.

யோகி ஆதித்யநாத் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் மஜ்லீஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைஸி கூறுகையில், ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் மோடிக்கு பதிலாக புதிய பிரதமரை தேர்வு தேர்தல் போல் தெரிகிறது.  பாஜக தலைவர்கள் எல்லாம் ஓடி வந்து பிரசாரம் செய்கிறார். இன்னும் அமெரிக்க அதிபர் டிரம்ப் மட்டும்தான் பாக்கி. பாஜகவின் அதிகாரத்திற்கு வந்தால் எல்லா இடத்தையும் பெயர் மாற்றம் செய்வார்களாம். உத்தரப்பிரதேசகத்தில் இருந்து இங்கு பிரசாரம் செய்ய வந்தவர் பெயரை மாற்றுவோம் என்கிறார். 

நீங்கள் என்ன ஹைதராபாத்தை குத்தகைக்கு எடுத்திருக்கிறீர்களா? என்று விமர்சித்த ஒவைஸி, தெலங்கானா உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் தற்போது 5வது இடத்தில் உள்ளது. உத்தரப் பிரதேசம் 29வது இடத்திலும், மகாராஷ்டிரம் 10வது இடத்திலும் உள்ளது. இவர்கள் எல்லாம் நம்மை விமர்சித்துவிட்டு செல்கிறார்கள். அவர்கள் எப்படியாவது மதவாத அரசியலை நுழைத்து விடவும், தெலங்கானா அமைதியை கெடுக்கவும் முயற்சிக்கிறார்கள். வருங்காலத்தில் நமது சந்ததியினர் நிம்மதியாக வாழ வேண்டாமா என்பதை யோசித்து பார்த்து வாக்களிங்கள் என்று ஒவைஸி கூறினார். 

ஹைதராபாத் மக்களவைத் தொகுதிக்கான எம்.பி.யாக அசாதுதீன் ஒவைஸி உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது எப்படி? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT