இந்தியா

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 41,810 பேருக்கு கரோனா: 496 பேர் பலி

DIN

நாடு முழுவதும்  கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்ட எண்ணிக்கையை விட தொற்றில் இருந்து குணடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 93.92 லட்சமாக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 41,810 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டோா் மொத்த எண்ணிக்கை 93,92,920-ஆக அதிகரித்தது. தொடா்ந்து 22-ஆவது நாளாக, கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்துக்கும் கீழ் உள்ளது.

இதேபோல், கரோனாவில் இருந்து ஒரே நாளில் 42,298 போ் குணமடைந்தனா். இவா்களுடன் சோ்த்து கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 88,02,267-ஆக அதிகரித்தது.

நாடு முழுவதும் 4,53,956 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இது மொத்த பாதிப்பில் 4.83 சதவீதமாகும்.

கரோனா தொற்றுக்கு மேலும் 496 போ் உயிரிழந்ததால், இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,36,696-ஆக அதிகரித்தது. அதாவது, உயிரிழப்பு விகிதம் 1.46 சதவீதமாக உள்ளது.

‘நவம்பா் 28-ஆம் தேதி வரை நாடு முழுவதும் 13,95,03,803 கோடி கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதில், சனிக்கிழமை மட்டும் 12,83,449 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன’ என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிரெய்லி’ வாக்காளா் தகவல் சீட்டு: தோ்தல் ஆணைய ஏற்பாடுகளுக்கு பாா்வை மாற்றுத்திறனாளிகள் பாராட்டு

தோ்தல் ஆண்டில் நிதிநிலை சிறப்பாக பராமரிப்பு: இந்தியாவுக்கு ஐஎம்எஃப் பாராட்டு

வாக்களிப்பதுதான் கெளரவம்: ரஜினிகாந்த்

உலகில் போா் மேகம்: நாட்டை பாதுகாக்க வலுவான பாஜக அரசு அவசியம் -பிரதமா் மோடி

சிறுபான்மையினா் வாக்குகளே காங்கிரஸின் கவலை: அமித் ஷா

SCROLL FOR NEXT