இந்தியா

இந்தூர்: மாவட்ட உயர்நீதிமன்றத்தில் ஊழியர் உள்பட 52 பேருக்கு கரோனா

DIN

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் உள்ள மாவட்ட உயர்நீதிமன்றத்தில் ஊழியர் உள்பட 52 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்தூர் மண்டல அதிகாரி அமித் மலகர் கூறுகையில், இந்தூரில் உள்ள மாவட்ட உயர்நீதிமன்றத்தில் 322 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் ஊழியர் உள்பட 52 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
தொற்று உறுதி செய்யப்பட்டோரில் பெரும்பாலானோர் உயர் நீதிமன்றத்தில் பணிபுரியும் ஊழியர்கள் ஆவர். இதையடுத்து அவர்கள் அனைவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 
இந்தூரில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றார்.
 மத்தியப் பிரதேசத்தில் தற்போது 14,981 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 1,85,013 பேர் குணமடைந்த நிலையில் 3,237 பேர் பலியாகியுள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாசிக்க மறந்த வரலாறு - மரண ரயில் பாதையின் கதை!

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

SCROLL FOR NEXT