இந்தியா

ஹைதராபாத் பெயர் மாற்றம் விவகாரம்: மீண்டும் கையிலெடுக்கும் யோகி!

28th Nov 2020 09:21 PM

ADVERTISEMENT


உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் பிரசாரத்தில், ஹைதராபாத்தை பாக்யநகராகப் பெயர் மாற்றுவது குறித்து பேசியுள்ளார்.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். 

அப்போது ஹைதராபாத்தை பாக்யநகராகப் பெயர் மாற்றுவது குறித்து யோகி பேசியதாவது:

"ஹைதராபாத்தை பாக்யநகராகப் பெயர் மாற்ற முடியுமா என்று சிலர் என்னிடம் கேள்வி எழுப்புகின்றனர். ஏன் மாற்ற முடியாது? உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் பைசாபாத்தை அயோத்தி என்றும் அலகாபாத்தை பிரயக்ராஜ் என்றும் நாங்கள் பெயர் மாற்றம் செய்தோம். அப்படி இருக்கையில் ஹைதராபாத் ஏன் பாக்யநகர் என்று பெயர் மாற்றம் செய்ய முடியாது?" என்றார் அவர்.

ADVERTISEMENT

ஹைதராபாத்தில் டிசம்பர் 1-ம் தேதி மாநகராட்சி தேர்தல் நடைபெறுகிறது. டிசம்பர் 4-ம் தேதி முடிவுகள் வெளியாகின்றன.

ஏற்கெனவே, தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஹைதராபாத், பாக்யநகராகப் பெயர் மாற்றப்படும் என 2018-இல் வாக்குறுதி அளித்திருந்தார் யோகி ஆதித்யநாத். ஆனால் அந்த தேர்தலில் முந்தைய தேர்தலைக் காட்டிலும் 4 இடங்கள் குறைந்து ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது.

Tags : Yogi Adityanath
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT