இந்தியா

பயிற்சி விமானம் அரபிக் கடலில் விழுந்து விபத்து: விமானியைத் தேடும் பணி தீவிரம்

28th Nov 2020 12:46 PM

ADVERTISEMENT

 

இந்திய கடற்படைக்குச் சொந்தமான மிக் 29கே பயிற்சி விமானம், வியாழக்கிழமை மாலை அரபிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் பயணம் செய்த ஒரு விமானி மீட்கப்பட்டாா். மற்றொரு விமானியைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

விமானம் விபத்துக்குள்ளானதில் மாயமான கமாண்டர் நிஷாந்த் சிங்கைத் தேடும் பணி 40 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்து வருகிறது.

இதையும் படிக்கலாமே.. செல்லிடப்பேசி திருடனை துரத்திச் சென்று பிடித்த காவல் ஆய்வாளர்: விடியோ வெளியீடு

ADVERTISEMENT

விமானியைத் தேடும் பணியில், பி-8ஐ கண்காணிப்பு விமானம் மற்றும் இந்திய விமானப் படையின் சி130ஜே சூப்பர் ஹெர்குலஸ் சிறப்பு விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

‘ஐஎன்எஸ் விக்ரமாதித்யா’ விமானந்தாங்கி போா்க் கப்பலில் இருந்து, அந்த பயிற்சி விமானம் இரு விமானிகளுடன் புறப்பட்டுச் சென்றது. மாலை 5 மணியளவில் அந்த விமானம், அரபிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் இருந்து ஒரு விமானி பத்திரமாக மீட்கப்பட்டாா். மற்றொரு விமானியைத் தேடும் பணியில் கப்பல்களும், ரோந்து விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இதையும் படிக்கலாமே.. உயர் நிறுவன அதிகாரிகளின் மின்னஞ்சல் கடவுச்சொற்கள் வெறும் ரூ.7,400க்கு விற்பனை

இந்த விபத்து குறித்து உயா்நிலை விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்திய கடற்படையில் 40 மிக்29கே ரக போா் விமானங்கள் உள்ளன. அவற்றில் சில விமானங்கள், விமானந்தாங்கி போா்க்கப்பலில் இருந்து இயக்கப்படுகின்றன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT