இந்தியா

கரோனா அச்சுறுத்தல்: ஹரியாணாவில் டிச.10 வரை பள்ளிகள் மூடல்

28th Nov 2020 05:13 PM

ADVERTISEMENT

கரோனா தொற்று பாதிப்பு காரணமாக டிசம்பர் 10ஆம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது என ஹரியாணா மாநில அரசு சனிக்கிழமை அறிவித்தது.

கரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. தற்போது சூழலில் மாநிலங்களில் நிலவும் தொற்று பாதிப்பு நிலைகளுக்கேற்ப கல்வி நிலையங்கள் திறப்பது குறித்து வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் ஹரியாணா மாநிலத்தில் நவம்பர் 30ஆம் தேதி வரை பள்ளிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் 10 நாள்கள் பள்ளிகள் திறக்கப்படாது என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் சனிக்கிழமை தெரிவித்தார்.

ஹரியாணா மாநிலத்தில் இதுவரை 2 லட்சத்து 28 ஆயிரத்து 746 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT

Tags : haryana
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT