இந்தியா

உத்தரகண்டில் நுழைய கரோனா பரிசோதனை கட்டாயம்

DIN


பிற மாவட்டங்களிலிருந்து உத்தரகண்ட் மாநிலத்துக்குள் நுழைய கரோனா பரிசோதனை கட்டாயம் என உத்தரகண்ட் காவல் துறை சனிக்கிழமை அறிவித்தது.

உத்தரகண்ட் தலைநகர் டேராடூனில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

சோதனைச் சாவடிகளில் கரோனா பரிசோதனை மேற்கொண்ட பிறகே மாநிலத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிற மாநிலங்களிலிருந்து வரும் மக்களின் தகவல்களை சேகரித்து தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

சனிக்கிழமை வெளியான மருத்துவக் குறிப்பின்படி, அங்கு தற்போது 4,812 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மொத்தம் 67,514 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீபக் பரம்பொல் - அபர்ணா தாஸ் திருமணம்!

அபர்ணா தாஸ் திருமணம்!

தாயை கொலை செய்த மகன் கைது

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

தங்கம் பவுனுக்கு ரூ.240 உயர்வு

SCROLL FOR NEXT