இந்தியா

ஆந்திரத்தில் தொடர் மழை: பலியானோர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

28th Nov 2020 06:51 PM

ADVERTISEMENT


ஆந்திரத்தில் நிவர் புயலில் பெய்த தொடர் கனமழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

ஆந்திரத்தில் நிவர் புயல் பாதிப்பு குறித்து சித்தூர், கடப்பா, நெல்லூர் ஆகிய மாவட்ட ஆட்சியர்களுடன் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆலோசனை மேற்கொண்டார். 

இதில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வது குறித்தும்,  மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

பின்னர், வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்றும், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களின் அடிப்படை செலவுக்காக தலா ரூ.500 வழங்கப்படும் என்றும் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்தார்.

ADVERTISEMENT

முன்னதாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நேரில் சென்று பார்வையிட்டார்.

Tags : Andhra
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT