இந்தியா

ஜம்மு-காஷ்மீர்: 'மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் ஜனநாயகத்திற்கு அவசியம்'

28th Nov 2020 02:16 PM

ADVERTISEMENT

மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் மிகவும் முக்கியமானது என்று மத்திய நிதித் துறை இணையமைச்சரும் பாஜக தேர்தல் பொறுப்பாளருமான அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு முதல்முறையாக மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் நடைபெற்று வருகிறது. 

மொத்தம் உள்ள 280 இடங்களுக்கு 8 கட்டங்களாக நடைபெறும் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில், முதல்கட்டமாக 43 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இது குறித்து ஜம்மு - காஷ்மீர் பாஜக தேர்தல் பொறுப்பாளர் அனுராக் தாக்குர் கூறியதாவது, ''ஜனநாயகத்தை வலுப்படுத்த மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் அவசியமானது. அதிக அளவிலான மக்கள் வாக்களிக்க முன்வருவது ஜனநாயத்திற்கான ஆதரவைக் காட்டுகிறது. ஜம்மு-காஷ்மீர் மக்கள் அமைதியையும் முன்னேற்றத்தையும் மட்டுமே விரும்புகின்றனர்'' என்று கூறினார்.

ADVERTISEMENT

Tags : jammu kashmir
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT