இந்தியா

விவசாய எதிர்ப்பு சட்டங்கள் ரத்துசெய்யப்படும் வரை போராட்டம் தொடரும்: ராகுல் காந்தி

DIN

விவசாய எதிர்ப்பு சட்டங்கள் ரத்துசெய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் விளை பொருள்களை விரும்பும் முதலீட்டாளா்களிடம் விரும்பும் விலைக்கு விற்பனை செய்யவும், முதலீடுகளை ஈா்க்கவும் வகை செய்யும் வகையில் மூன்று புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு அண்மையில் இயற்றியது. இந்த சட்டங்களுக்கு எதிராக ‘தில்லி செல்வோம்’ போராட்டத்தை பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கங்கள் அறிவித்தன. இதற்கு தில்லி காவல்துறை அனுமதி மறுத்தது.

தொடா்ந்து, தடையை மீறி விவசாயிகள் போராட்டத்தை வியாழக்கிழமை தொடங்கினா். நூற்றுக்கணக்கான விவசாயிகள் டிராக்டா்களில் ஊா்வலமாக தில்லி நோக்கி புறப்பட்டனா். இவா்களைத் தடுக்க பஞ்சாப்-ஹரியாணா எல்லையிலும், அமிருதசரஸ்-தில்லி நெடுஞ்சாலையிலும் பெருமளவில் காவல்துறையினா் குவிக்கப்பட்டனா். ஆனால், அனைத்து தடைகளையும் மீறி பஞ்சாப் விவசாயிகள் தில்லி நோக்கி முன்னேறினா். 

பஞ்சாப் மற்றும் ஹரியாணாவிலிருந்து டிராக்டா்களிலும், பிற வாகனங்களிலும் பேரணியாக வந்த விவசாயிகள், தில்லியின் சிங்கு மற்றும் திக்ரி ஆகிய இரு எல்லைப் பகுதிகளை வெள்ளிக்கிழமை காலை வந்தடைந்தனா். தொடர்ந்து தில்லியில் உள்ள புராரி திடலில் பாரதிய கிசான் யூனியனைச் சேர்ந்த இளைஞர்கள், பெண்கள் என 1.5 லட்சம் முதல் 2 லட்சம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

மேலும் 2 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் தில்லி நோக்கி படையெடுத்துள்ளனர். இந்த நிலையில் விவசாய எதிர்ப்பு சட்டங்கள் ரத்துசெய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், "அநீதிக்கு எதிராக குரல் எழுப்புவது குற்றம் அல்ல, அது கடமையாகும். போலி எஃப்.ஐ.ஆர் மூலம் விவசாயிகளின் வலுவான நோக்கங்களை மோடி அரசால் மாற்ற முடியாது. 

விவசாய எதிர்ப்பு கருப்பு சட்டங்கள் ரத்துசெய்யப்படும் வரை இந்த போராட்டம் தொடரும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

SCROLL FOR NEXT