இந்தியா

தில்லியில் புதிதாக 4,998 பேருக்கு கரோனா

28th Nov 2020 08:17 PM

ADVERTISEMENT

தில்லியில் புதிதாக 4,998 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தில்லியில் கடந்த சில நாள்களாக கரோனா மூன்றாவது அலை உள்ளது. இதனால், தில்லியில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டு பலியாவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து தில்லி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  கடந்த 24 மணி நேரத்தில் 4,998 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 5,61,742 ஆக அதிகரித்தது. இதேபோல், கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பால் 89 உயிரிழந்ததால், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,998 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றில் இருந்து 6,512 பேர் குணமடைந்துள்ளனர். இவர்களுடன் சேர்த்து தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,16,166 ஆக அதிகரித்தது. தற்போது தொற்றுக்கு 36,578 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ADVERTISEMENT

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 69,051 கரோனா மாதிரி சோதனைகள் பரிசோதிக்கப்பட்டதாக தில்லி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
 

Tags : coronvirus
ADVERTISEMENT
ADVERTISEMENT