இந்தியா

கரோனா தொற்றை கண்டறியும் புதிய முறைக்கு ஐசிஎம்ஆர் குழு ஒப்புதல்

28th Nov 2020 05:43 PM

ADVERTISEMENT

 

புது தில்லி: கரோனா தொற்றை கண்டறிவதற்கான புதிய முறைக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் குழுவின் (சிஎஸ்ஐஆர்) உறுப்பு ஆய்வகமான, ஹைதராபாத்தில் உள்ள செல்கள் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் (சிசிஎம்பி) உருவாக்கியுள்ள கரோனா தொற்றை கண்டறிவதற்கான புதிய முறைக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போதுள்ள தங்க தரச்சான்று பெற்ற ஆர்டி-பிசிஆர் முறையை சற்றே மாறுதலுக்கு உட்படுத்தி செல்கள் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் உருவாக்கியுள்ள நேரடி காய்ந்த மூக்கு திரவம் (டிரை ஸ்வாப்)  ஆர்டி-பிசிஆர் சோதனையை தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்ய இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

ADVERTISEMENT

இதை செயல்படுத்துவதன் மூலம் புதிதாக எந்த முதலீடும் செய்யாமல் பரிசோதனைகளின் அளவை 2 முதல் 3 மடங்கு வரை அதிகரிக்கலாம். இதற்கு தேவைப்படும் குறைந்த செலவு மற்றும் நேரத்தை கருத்தில் கொண்டு, இந்த பரிசோதனையை பின்பற்றுவதற்கான அறிவுரையை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு வழங்கியுள்ளது.

ஏப்ரல் 2020 முதல் கரோனா வைரஸ் மாதிரிகளை ஹைதராபாத்தில் உள்ள செல்கள் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் கையாண்டு வருகிறது. தெலங்கானாவில் உள்ள சுகாதாரப் பணியாளர்களோடு நெருங்கி பணிபுரிந்த பிறகு, பரிசோதனையை தாமதமாக்கும் சில விஷயங்களை இம்மையம் கண்டறிந்தது. இதைத் தொடர்ந்து இந்த புதிய முறையை உருவாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT