இந்தியா

கரோனா: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 41,322 பேர் பாதிப்பு; 485 பேர் பலி

DIN

புது தில்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றுக்கு புதிதாக 41,322 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், அதே கால அளவில் 485 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

சனிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 41,322 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 93,51,110-ஆக அதிகரித்தது.

இதேபோல், கரோனாவில் இருந்து ஒரே நாளில் 41,452 பேர் குணமடைந்தனர். இவர்களுடன் சேர்த்து கரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 87,59,969-ஆக அதிகரித்தது.

நாடு முழுவதும் 4,54,940 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த பாதிப்பில் 4.87 சதவீதமாக குறைந்துள்ளது. 

கரோனா தொற்றுக்கு மேலும் 485 பேர் உயிரிழந்ததால், இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,36,200-ஆக அதிகரித்தது. அதாவது, உயிரிழப்பு விகிதம் 1.46 சதவீதமாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

‘இனி விளம்பரங்கள் இல்லை, படங்கள் மட்டுமே’ : பிவிஆரின் புதிய திட்டம் பலனளிக்குமா?

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT