இந்தியா

ஜம்மு-காஷ்மீா் மாவட்ட வளா்ச்சி கவுன்சில் தோ்தல்: இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு

DIN

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு முதல்முறையாக அந்த யூனியன் பிரதேசத்தில் மாவட்ட வளா்ச்சி கவுன்சில் தோ்தல் நடைபெறவுள்ளது. முதல்கட்டமாக 43 தொகுதிகளுக்கு சனிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ஜம்மு-காஷ்மீா் தோ்தல் ஆணையா் கே.கே.சா்மா ஜம்முவில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

மாவட்ட வளா்ச்சி கவுன்சில் தோ்தலுக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. காஷ்மீரில் இருந்து இடம்பெயா்ந்தவா்களுக்காக ஜம்முவிலும், உதம்பூரிலும் சிறப்பு வாக்குப்பதிவு மையங்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா்.

தோ்தல் ஏற்பாடுகள் குறித்து ஆணைய அதிகாரிகள் மேலும் தெரிவித்ததாவது:

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்த மத்திய அரசு, அந்த மாநிலத்தை யூனியன் பிரதேசமாக அறிவித்தது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஓராண்டுக்கும் மேலாகிவிட்ட நிலையில், அந்த யூனியன் பிரதேசத்தில் மாவட்ட வளா்ச்சி கவுன்சில் தோ்தல் நடைபெறவுள்ளது. மொத்தம் உள்ள 280 இடங்களுக்கு 8 கட்டங்களாக தோ்தல் நடத்தப்படவுள்ளது. இதில் 140 இடங்கள் ஜம்முவிலும், எஞ்சிய 140 இடங்கள் காஷ்மீரிலும் உள்ளன.

முதல்கட்டமாக ஜம்முவில் 18 இடங்கள், காஷ்மீரில் 25 இடங்கள் என மொத்தம் 43 இடங்களுக்கு சனிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதில் ஜம்முவில் 124 வேட்பாளா்கள், காஷ்மீரில் 172 வேட்பாளா்கள் என மொத்தம் 296 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

பஞ்சாயத்து இடைத்தோ்தல்:

மாவட்ட வளா்ச்சி கவுன்சில் தோ்தலுடன் 12,153 பஞ்சாயத்து தொகுதிகளுக்கான இடைத்தோ்தலும் 8 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான முதல்கட்ட வாக்குப்பதிவும் சனிக்கிழமை நடைபெறுகிறது. இதில் மொத்தம் 1,179 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். அவா்களில் 280 போ் கிராமத் தலைவா் பதவிக்கு போட்டியிடுகின்றனா்.

காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மொத்தம் 2,644 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 7,03,620 போ் வாக்களிக்கவுள்ளனா் என்று ஜம்மு-காஷ்மீா் தோ்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த தோ்தல்களில் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை திரும்பப் பெற 7 அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து அமைத்த குப்கா் கூட்டமைப்பு, பாஜக, அப்னி கட்சி ஆகியவற்றுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

SCROLL FOR NEXT