இந்தியா

உத்தரகண்ட்: பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்ததில் இருவர் பலி; 6 பேர் படுகாயம்

27th Nov 2020 06:00 PM

ADVERTISEMENT

உத்தரகண்ட் மாநிலத்தின் பகேஷ்வர் மாவட்டத்தில் 200 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் கார் விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயமடைந்தனர். 

பகேஷ்வரின் காந்தா பகுதிக்கு அருகே உள்ள ஜெதானி கிராமத்திற்கு அருகே அதிகாலை இந்த விபத்து நடந்ததாக போலீஸ் சூப்பிரண்டு மணிகாந்த் மிஸ்ரா தெரிவித்தார். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள சுகாதார மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சங்கர் என்ற கிராமத்தில் நடந்த திருமண விழாவில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்ப சோலியா நடனக் கலைஞர்கள் இந்த காரில் சென்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

Tags : accident
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT