இந்தியா

நிவர் புயல்: முதல்வரிடம் கேட்டறிந்தார் பிரதமர்

27th Nov 2020 09:55 PM

ADVERTISEMENT

நிவர் புயல் பாதிப்புகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
மிகவும் அச்சுறுத்தி வந்த ‘நிவா்’ புயலானது, புதுச்சேரியிலிருந்து 26 கி.மீ. தொலைவு வடக்கே மரக்காணம் அருகே புதன்கிழமை நள்ளிரவு வலிவிழந்து கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்த போது, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. 
ஆங்காங்கே மரங்கள் சாய்ந்தும், மின் கம்பங்கள் முறிந்தும் விழுந்தன. அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு அவற்றை சீர் செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தற்போது போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
இந்த நிலையில் நிவர் புயல் பாதிப்புகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். தில்லியில் இருந்து தொலைபேசி வாயிலாக முதல்வரை தொடர்புகொண்டு பேசிய பிரதமர், புயல் நிவாரண மீட்புப் பணிகளுக்கு தமிழகத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளைச் செய்வதாகவும் உறுதியளித்துள்ளார்.

Tags : PMMODI
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT