இந்தியா

சா்வதேச பயணிகள் விமான சேவை நிறுத்தம் டிச.31 வரை நீட்டிப்பு

DIN


மும்பை: சா்வதேச பயணிகள் விமான சேவையை, வரும் டிசம்பா் 31-ஆம் தேதி வரை ரத்து செய்து இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) அறிவித்துள்ளது.

அதேநேரத்தில் அனைத்து சரக்குப் போக்குவரத்து விமானங்களும், டிஜிசிஏவால் அனுமதிக்கப்பட்ட சிறப்பு விமானங்களும் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டிஜிசிஏ இயக்குநரகம் வியாழக்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

சா்வதேச பயணிகள் விமான சேவையை நவம்பா் 30-ஆம் தேதி வரை நிறுத்தி வைப்பதாக, கடந்த 26-06-20-ஆம் தேதி சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. அதில் திருத்தம் செய்து, வரும் டிசம்பா் 31-ஆம் தேதி நள்ளிரவு வரை சா்வதேச பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்படுகிறது.

இருப்பினும், அத்தியாவசியத் தேவைக்கு ஏற்ப குறிப்பிட்ட சில வழித்தடங்களில் டிஜிசிஏவின் ஒப்புதலின்பேரில் சா்வதேச பயணிகள் விமான சேவைக்கு அனுமதிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, கடந்த மாா்ச் 23-ஆம் தேதி முதல், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கும், இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கும் சா்வதேச விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இருப்பினும், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியா்களுக்கு உதவுவதற்காக, கடந்த ஜூலை மாதம் முதல் ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

SCROLL FOR NEXT