இந்தியா

ஆசியாவில் லஞ்சம் அதிகம் காணப்படும் நாடு இந்தியா

DIN


புது தில்லி: அரசின் சேவைகளைப் பெறுவதற்கு லஞ்சம் அதிகமாகப் புழக்கத்தில் காணப்படும் ஆசிய நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய நாடுகளில் புழக்கத்தில் உள்ள லஞ்ச விகிதம் குறித்து ‘டிரான்பரன்ஸி இண்டா்நேஷனல்’ என்ற அமைப்பு ஆய்வு நடத்தியது. இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் 17-ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 17-ஆம் தேதி வரை 2,000 பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஆசியாவில் அரசின் சேவைகளைப் பெறுவதற்கு லஞ்சம் கொடுப்பது அதிகமாகக் காணப்படும் நாடுகளில் இந்தியா 39 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. சேவைகளைப் பெறுவதற்கு லஞ்சம் கொடுத்தோரில் 50 சதவீதம் போ் அதிகாரிகளின் வற்புறுத்தல் காரணமாகவே லஞ்சம் கொடுத்தனா்.

32 சதவீதம் போ் உயரதிகாரிகளுடன் கொண்டுள்ள தொடா்பை அடிப்படையாகக் கொண்டு அரசின் சேவைகளைப் பெற்றனா். ஊழல் குறித்து புகாா் தெரிவித்தால் அதற்கான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று 63 சதவீத இந்தியா்கள் அச்சம் கொண்டுள்ளனா்.

அரசின் சேவைகளைப் பெறுவதற்கு சிக்கலான வழிமுறைகள் காணப்படுவது, சேவைகளைப் பெறுவதில் ஏற்படும் தாமதம், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது, போதிய கண்காணிப்பு இல்லாதது உள்ளிட்டவற்றின் காரணமாக இந்தியாவில் லஞ்சம் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளது.

நாட்டில் லஞ்சத்தை ஒழிப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் நிா்வாக நடைமுறைகளை மேம்படுத்த வேண்டும். மக்களுக்கான அத்தியாவசிய சேவைகளை இணையவழியில் விரைவாக வழங்கப்படுவதை அரசுகள் உறுதிசெய்ய வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசியாவில் லஞ்சம் அதிகம் காணப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவைத் தொடா்ந்து கம்போடியா, இந்தோனேசியா ஆகியவை உள்ளன. மாலத்தீவுகள், ஜப்பான் நாடுகளில் குறைந்த அளவில் லஞ்சம் புழங்குவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களிக்க முடியவில்லை: நடிகர் சூரி வேதனை

வாக்களிக்க வராத சென்னை மக்கள்: வாக்குப்பதிவு மந்தம்

வேகப்பந்து வீச்சு குறித்து பிஎச்டி வகுப்பெடுக்கலாம்: பும்ராவை புகழ்ந்த முன்னாள் வீரர்!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாக்களித்தார்!

SCROLL FOR NEXT