இந்தியா

மெகபூபா முப்திக்கு வீட்டுக்காவலா?: காஷ்மீர் காவல்துறை மறுப்பு

27th Nov 2020 05:23 PM

ADVERTISEMENT

தான் வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டுள்ளதாக ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்த கருத்துக்கு காஷ்மீர் மண்டல காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. 

மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை உறுதி செய்யும் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டு 14 மாதங்களுக்குப் பிறகு கடந்த அக்டோபர் 14ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வரும் அவர் தான் மீண்டும் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை தெரிவித்தார். 

அவரும் அவரது மகள் இல்டிஜா முப்தியும் கடந்த 2 நாள்களாக வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், என்ஐஏவால் கைது செய்யப்பட்ட வாகீத் பர்ராவை சந்திக்க தாங்கள் அனுமதிக்கப்படவில்லை எனவும் தெரிவித்த அவர் கருத்துக்கு காஷ்மீர் காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

 

“பி.டி.பி தலைவர் மெகபூபா முப்தி வீட்டுக் காவலில் இல்லை. பாதுகாப்பு காரணங்களால் புல்வாமாவுக்குச் செல்ல வேண்டாம் என்று அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது

Tags : hbooba Mufti
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT