இந்தியா

கரோனா போராட்ட பயணத்தில் ஊடகங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன: மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன் 

27th Nov 2020 09:26 PM

ADVERTISEMENT

கரோனா போராட்ட பயணத்தில், ஊடகங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன என ஐஐஎம்சி மாணவர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் கூறினார்.
இந்திய வெகுஜன மக்கள் தொடர்பு மையம் (ஐஐஎம்சி) மாணவர்களிடம் காணொலிக் காட்சி மூலம் உரையாற்றிய டாக்டர் ஹர்ஷ் வர்தன் கூறியதாவது: ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருக்கும் ஊடகம், மக்கள் அணுகுமுறையை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. 
அதனால் ஊடகத்தினருக்கு மிகப் பெரிய பொறுப்பு உள்ளது. கரோனாவுக்கு எதிரான 11 மாத கால பேராட்ட பயணத்தில், மக்களுக்கு கரோனா தொடர்பான தகவல்களை அளிப்பதில் ஊடகத்தினர் 24 மணி நேரமும் பணியாற்றினார். இந்த பயணத்தில் ஊடகம் முக்கியப் பங்காற்றுகிறது. 
கரோனா முன்கள பணியாளர்கள் பட்டியலில் ஊடகத்தினரையும் சேர்த்துள்ளேன். போலியோவுக்கு எதிரான எங்கள் போராட்டத்தில், ஆரோக்கிய இதழியல் மையக் கருவாக இருந்தது. 
போலியோ பாதித்தவர்களில் 60 சதவீதம் பேர் இந்தியாவில் இருந்தபோது, பத்திரிக்கையாளர்கள் தங்கள் பங்களிப்பின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி போலியோ ஒழிப்பு திட்டத்தை வெற்றியடைச் செய்தனர். அதேபோல் 2025ஆம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிப்பதிலும், ஊடகத்தினரின் பங்களிப்பு இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT