இந்தியா

கரோனா தடுப்பூசி சோதனை: தன்னார்வலராக முன்வந்த மேற்குவங்க அமைச்சர்

DIN

மேற்கு வங்க நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் பிர்காத் ஹக்கிம் கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு தன்னார்வலராக விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் பாரத் பயோ டெக் நிறுவனம் இணைந்து உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசியான 'கோவாக்சின்' நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனையில் இருந்து வருகிறது. 

தொடர்ந்து மேற்கு வங்க மாநிலத்தில் கரோனா தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனையில் மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் பிர்காத் ஹக்கிம் தன்னார்வலராக முன்வந்துள்ளார். 

நான் மக்களுக்கு உதவி செய்ய விரும்புகிறேன். எனது இந்த பங்களிப்பின் மூலமா மக்களுக்கு சிகிச்சையளிக்க முடிந்தால் நான் மகிழ்ச்சியாக இருப்பேன். கோவாக்சின் மூன்றாம் கட்ட சோதனையின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார். 

கொல்கத்தா முனிசிபல் கார்ப்பரேஷனின் நிர்வாகக் குழுவின் தலைவராகவும் இருக்கும் ஹக்கிம், தனது இந்த விருப்பம் குறித்து அதிகாரிகளுடன் பேசியுள்ளார். இதையடுத்து விரைவில் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்து அவர் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் உடல் தகுதியுடன் இருக்கிறாரா என்பதை மருத்துவர்கள் உறுதி செய்வர். 

மேற்குவங்கத்தில் கோவாக்சின் மூன்றாம் கட்ட பரிசோதனையில் சுமார் ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

SCROLL FOR NEXT