இந்தியா

அஸ்ஸாம் முன்னாள் முதல்வர் தருண் கோகோய் உடலுக்கு ராகுல் நேரில் அஞ்சலி

DIN

குவாஹாட்டி: மறைந்த அஸ்ஸாம் முன்னாள் முதல்வர் தருண் கோகோயின் உடலுக்கு புதன்கிழமை அஞ்சலி செலுத்திய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, அவரை தனது குருவாக ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் தருண் கோகோய் கடந்த திங்கள்கிழமை குவாஹாட்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலமானதையடுத்து அவரது உடல் ஸ்ரீமந்த சங்கர்தேவா கலாúக்ஷத்திரத்தில் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக புதன்கிழமை வைக்கப்பட்டிருந்தது.
அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, கோவாவிலிருந்து சிறப்பு விமானத்தில் குவாஹாட்டிக்கு வந்த ராகுல் காந்தி, தருண் கோகோயின் மகனும், எம்.பி.யுமான கெüரவ் கோகோயின் முன்னிலையில் அவரது உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் ராகுல் கூறியதாவது:  அஸ்ஸாம் மாநிலத்தில் 3 முறை முதல்வராக இருந்த தருண் கோகோய் எப்போதும் அஸ்ஸாம் பற்றியும், அந்த மாநில மக்களைப் பற்றி மட்டுமே பேசி வந்தார். எனவே அவருடன் பேசுவது முழு மாநிலத்துடனும் பேசுவதைப் போன்றதாகும். கோகோய் அஸ்ஸாமின் தலைவர் மட்டுமல்ல; அவர் ஒரு சிறந்த முதல்வராகவும், தேசியத் தலைவராகவும் இருந்தார். அஸ்ஸாம் மக்களை ஒன்றிணைத்து மாநிலத்தில் அமைதி திரும்புவதற்கு உறுதுணையாக இருந்தார். அவர் அஸ்ஸாமுக்கு மட்டுமின்றி, இந்தியாவுக்கும் மிகப்பெரும் சேவையைப் புரிந்துள்ளார். 
நான் கோகோயுடன் பல மணி நேரம் செலவிட்டுள்ளேன். அவர் என் ஆசிரியர்; எனது குரு. அஸ்ஸாம் மாநிலம், இந்த மாநில மக்கள் பற்றி அவர் எனக்கு விளக்கி கூறியுள்ளார். அவரது இழப்பை தனிப்பட்ட முறையில் பேரிழப்பாகக் கருதுகிறேன் என்றார். 
இதையடுத்து திஸ்பூரில் இருந்த உள்ள அவரது மனைவி டோலி கோகோயையும், அவரது மகள் சந்திரிமாவையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ராகுல் காந்தி அங்கு 30 நிமிடங்கள் இருந்தார்.  
தருண் கோகோயின் உடல் வியாழக்கிழமை பிற்பகல் குவாஹாட்டியில் உள்ள நவக்கிரஹா இடுகாட்டில் தகனம் செய்யப்பட உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

நம்பிக்கை நாயகன்!

SCROLL FOR NEXT