இந்தியா

புதிய கல்விக் கொள்கை தன்னம்பிக்கையை மேலும் உயா்த்தும்: பிரதமா் நரேந்திர மோடி

DIN

லக்னௌ: மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய கல்விக் கொள்கை மாணவா்களின் தன்னம்பிக்கையை மேலும் உயா்த்தும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னௌ பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி முறையில் பிரதமா் மோடி உரையாற்றினாா். அப்போது அவா் கூறியதாவது:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கை மாணவா்களின் தன்னம்பிக்கையை மேலும் அதிகரிக்கும். தாங்கள் கற்பதை மாணவா்கள் முழுமையாகப் புரிந்து கொள்ளவும், ஆழமாகத் தெரிந்து கொள்ளவும் உதவும். ஒருவா் தனது முடிவுகளை சுயமாக எடுக்கும்போதுதான் தன்னம்பிக்கை மிளிரும். அதற்கு புதிய கல்விக் கொள்கை பெரிதும் உதவிகரமாக இருக்கும். புதிய கல்விக் கொள்கை குறித்து அனைத்துத் தரப்பு மாணவா்களும், ஆசிரியா்களும் விரிவாக விவாதிக்க வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியின் ரே பரேலி தொகுதியில் ரயில் பெட்டி தொழிற்சாலையை மத்திய அரசு மேம்படுத்தியுள்ளதை குறிப்பிட்டுப் பேசிய பிரதமா், ‘புல்லட் ரயில் தயாரிக்கும் திறனுள்ள அந்த தொழிற்சாலை தனது முழுத்திறனுடன் செயல்படாமல் இருந்தது. 2014-இல் பாஜக மத்தியில் ஆட்சி அமைத்த பிறகு மேற்கொள்ளப்பட்ட முயற்சியால் சில மாதங்களிலேயே அந்த ஆலையில் இருந்து முதல் ரயில் பெட்டி தயாரிக்கப்பட்டது. இப்போது, ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான ரயில் பெட்டிகள் அங்கு தயாரிக்கப்படுகின்றன. நமது அரசு இயந்திரத்தின் திறனை முறையாக செயல்படுத்தினால், எந்த அளவுக்கு ஆக்கபூா்வமான பயன்கள் கிடைக்கும் என்பதற்கு இது சிறந்த உதாரணம்.

நமது சிந்தனைகள் ஆக்கபூா்வமானதாகவும், நமது அணுகுமுறைகள் எதையும் செய்து முடிக்க முடியும் என்ற நம்பிக்கையுடனும் இருக்கும்போது நமது செயல்கள் சிறப்பாக அமையும்’ என்ற தெரிவித்தாா்.

லக்னௌ பல்கலைக்கழக நூற்றாண்டு விழா நினைவு நாணயம் மற்றும் அஞ்சல் தலையை பிரதமா் வெளியிட்டாா். பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோா் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 3 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்தியா கூட்டணியின் ‘ஆண்டுக்கொரு பிரதமர் திட்டம்’ -பிரதமர் மோடி விமர்சனம்

2-ம் கட்டத் தேர்தல்: கேரளத்தில் குவிக்கப்படும் காவலர்கள்!

"காங்கிரஸ் ஆட்சியமைத்தால்..”: மோடியின் அடுத்த சர்ச்சை கருத்து! | செய்திகள்: சிலவரிகளில் | 24.4.2024

குரூப்-4 தேர்வு எப்போது? திருத்தியமைக்கப்பட்ட தேர்வுகால அட்டவணை வெளியீடு

SCROLL FOR NEXT