இந்தியா

அசாம் வெள்ளத்தில் வீடிழந்த கலைஞருக்கு வீடு: காதி, கிராம தொழில்கள் ஆணையம் உதவி

DIN

வட கிழக்கு மாநிலமான அசாமில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் வீடிழந்த கலைஞர் ஒருவருக்கு காதி, கிராம தொழில்கள் ஆணையம் வீடு வழங்கி உதவியுள்ளது. 

அசாம் மாநிலத்தின் நல்பாரி மாவட்டத்தைச் சேர்ந்த 44 வயதான நிரு கலிதா, பிரம்மபுத்ரா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு வீட்டை இழந்து மிகவும் அவதியுற்றார். இந்த நிலையில் காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையம் அவருக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது. கலைஞர்களுக்கு வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் நிரு கலிதாவுக்கு வீடு ஒதுக்கப்பட்டுள்ளது.

காதி கலைஞரான நிரு கலிதா, கடந்த 15 ஆண்டுகளில் பிரம்மபுத்ரா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் 14 முறை தமது இருப்பிடத்தை மாற்றியுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தலைவர் வினய் குமார் சக்சேனா, கலைஞர்களுக்கு வாழ்வாதாரங்களை உருவாக்கித் தருவதுடன், அவர்கள் தொழில் புரிய ஏதுவான சூழலை ஏற்படுத்தி, அதன் மூலம் உற்பத்தியை அதிகரிக்கவும் ஆணையம் உறுதிபூண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

வட கிழக்கு மாகாணத்தில் காதி கலைஞர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் இதுவரை 411 வீடுகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி; 25 பேர் படுகாயம்!

மோடியின் நண்பர்களிடமிருந்து பணம் மீட்கப்பட்டு மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்: ராகுல்

சாதிவாரி கணக்கெடுப்பை எந்த சக்தியாலும் தடுக்கமுடியாது: ராகுல்

அரசியல்வாதிகள் பாணியில் வீதி வீதியாகச் சென்ற பட இயக்குநர் ஹரி: இதற்காகவா?

விவிபேட் வழக்கு: சரமாரியாக கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம்!

SCROLL FOR NEXT