இந்தியா

130 கோடி மக்களுக்கும் பாதுகாப்பான மருத்துவச் சேவைகளை அளிப்பதே அரசின் நோக்கம்: மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன்

DIN

130 கோடி மக்களுக்கும் சரியான நேரத்தில், குறைந்த செலவில், பாதுகாப்பான மருத்துவச் சேவைகளை அளிப்பதே அரசின் நோக்கம் என்று மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்தார். 

பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம் மற்றும் தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கம் ஆகியவற்றின் செயல்பாட்டை ஆய்வு செய்வதற்கான உயர்மட்ட கூட்டத்தை நடத்துவதற்காக தேசிய சுகாதார ஆணையத்துக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் ஹர்ஷவர்தன் இன்று வருகை புரிந்தார்.

அரசின் முக்கிய சுகாதார திட்டங்களை முழுமையாக ஆய்வு செய்த அமைச்சர், இவற்றின் சிறப்பம்சங்கள் குறித்து அதிகாரிகளுடன் உரையாடினார்.

அப்போது பேசிய அவர், "நாட்டின் 130 கோடி மக்களுக்கும், அவர்கள் எங்கிருந்தாலும், எப்போது தேவை ஏற்பட்டாலும், சரியான நேரத்தில், குறைந்த செலவில், பாதுகாப்பான மருத்துவச் சேவைகளை அளிப்பதே அரசின் நோக்கம்," என்றார்.

இதற்காகத் தான் பிரதமர் நரேந்திர மோடியின் லட்சியமிக்க தலைமையின் கீழ் தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கம் தொடங்கப்பட்டதாக ஹர்ஷவர்தன் கூறினார்.

நாடு தழுவிய டிஜிட்டல் சுகாதார சூழலியலை உருவாக்குவதன் மூலம் சுகாதரத்துறையை தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கம் டிஜிட்டல் மயமாக்கும் என்று அவர் கூறினார். இதன் மூலம், நோயாளிகள், மருத்துவர்கள், சிகிச்சைகள், மருத்துவ வசதிகள் குறித்த தகவல்கள் முறைப்படுத்தப்படும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

SCROLL FOR NEXT