இந்தியா

பஞ்சாப் விவசாயிகள் போராட்டம்: கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி கலைப்பு

DIN

அம்பாலா: வேளாண் சட்டத்திற்கு எதிராக ஹரியாணா எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்ட பஞ்சாப் விவசாயிகளை கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் காவல்துறையினர் கலைத்தனர்.

வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 'தில்லி சாலோ' என்ற பெயரில் தில்லி நோக்கி பஞ்சாப் விவசாயிகள் பேரணியில் ஈடுபட்டபோது ஹரியாணா எல்லையில் தடுப்புகளை அமைத்து காவல்துறையினர் விவசாயிகளைத் தடுத்தனர்.

மத்திய அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், தில்லி சாலோ என்ற பெயரில் பஞ்சாப் மற்றும் ஹரியாணா விவசாயிகள் தில்லி நோக்கி பேரணியாகச் சென்று தலைநகரில் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.

அதன்படி இன்று காலை ஏராளமான பஞ்சாப் விவசாயிகள் தில்லி நோக்கி பேரணியாகச் சென்றனர். ஹரியாணா மாநில எல்லையான ஷம்பு பகுதியில் காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து விவசாயிகளைத் தடுத்தனர்.

ஷம்பு தேசிய நெடுஞ்சாலையில் தடுத்து நிறுத்தப்பட்ட விவசாயிகள், காவல்துறையினரின் தடுப்புகளை மீறி முன்னேறினர். கருப்புக் கொடிகளை வைத்து அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர்.

நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர ஹரியாணா காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் விவசாயிகளைக் கலைக்க முயன்றனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இது குறித்து பேசிய பஞ்சாப் விவசாயி, ''அமைதியான முறையில் பேரணியில் ஈடுபட்ட விவசாயிகள் மீது ஹரியாணா காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வது கண்டிக்கத்தக்கது. நாங்கள் அமைதியான முறையில் போராடி வருகிறோம். அமைதியான முறையில் போராடும் ஜனநாயக உரிமையை அவர்கள் எங்களிடமிருந்து பறிக்க முயல்கின்றனர்'' என்று கூறினார்.

விவசாயிகளின் பேரணியையொட்டி 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் பஞ்சாப் - ஹரியாணா எல்லையை மூடுமாறு ஹரியாணா அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வழுவூா் பாலமுருகன் கோயிலில் காவடி உற்சவம்

திருட்டு வழக்கில் தேடப்பட்டுவந்தவா் கைது

கோடை வெப்பத்தால் கண்களுக்கு பாதிப்பு: எச்சரிக்கும் மருத்துவா்கள்

பறவைக் காவடி

பரமத்தி வேலூரில் ரூ. 36 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்

SCROLL FOR NEXT