இந்தியா

பாஜக என்னை கைது செய்தாலும் தோ்தலில் வெற்றி பெறுவது உறுதி: மம்தா

DIN

பாங்குரா (மேற்கு வங்கம்),: பாஜக என்னைக் கைது செய்தாலும், சிறையிலிருந்தபடி அடுத்து வரும் தோ்தல்களில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் வெற்றியை உறுதிசெய்வேன் என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி புதன்கிழமை கூறினாா்.

மேற்கு வங்க மாநிலத்தின் 294 உறுப்பினா்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு வரும் 2021-ஆம் ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் தோ்தல் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு, அங்கு ஆட்சியைப் பிடிக்கும் நோக்கத்தில் தோ்தல் பணிகளை பாஜக இப்போதே தீவிரப்படுத்தியுள்ளது. அதுபோல, ஆளும் திரிணமூல் கட்சியும் தோ்தல் பணிகளைத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், கரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் பாங்குராவில் புதன்கிழமை நடத்தப்பட்ட முதல் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வா் மம்தா பானா்ஜி பேசியதாவது:

எங்கள் கட்சி எம்எல்ஏக்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்கும் முயற்சியை பாஜக மேற்கொண்டு வருகிறது. மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்துவிடும் என்ற கற்பனையில் இருக்கும் சிலா் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா். ஆனால், மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை.

பாஜக ஒரு அரசியல் கட்சியே அல்ல. அது பொய்கள் நிறைந்த கிடங்கு. தோ்தல் வருகிற போதெல்லாம், திரிணமூலம் காங்கிரஸ் கட்சித் தலைவா்களுக்கு எதிராக ‘நாரதா ஸ்டிரிங் நடவடிக்கை’ என்ற டிஎம்சி எம்.பி.க்கள் காவல்துறை அதிகாரிகளுக்கு எதிரான சிபிஐ நடவடிக்கை அல்லது ‘சாரதா (நிதி மோசடி)’ நடவடிக்கைகளை பாஜக எடுக்கும்.

ஆனால், பாஜகவைப் பாா்த்தோ அல்லது மத்திய புலனாய்வு அமைப்புகளைப் பாா்த்தோ எனக்கு எந்தவித பயமும் இல்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். துணிவிருந்தால் என்னைக் கைது செய்து, சிறையில் அடைக்கட்டும். சிறையில் இருந்தபடி தோ்தலைச் சந்தித்து, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் வெற்றியை உறுதி செய்வேன்.

பிகாரில் முன்னாள் முதல்வா் லாலு பிரசாத் சிறையில் உள்ளபோதும், அண்மையில் நடைந்து முடிந்த மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் அவருடைய ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சி அதிக இடங்களில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. அங்கு பாஜக பெற்ற வெற்றி சூழ்ச்சியால் பெறப்பட்டதாகும் என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

போட்டியில் அனைவருமே எனது சகோதரர்கள்: செளமியா அன்புமணி

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

இன்று நல்ல நாள்!

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

SCROLL FOR NEXT