இந்தியா

தில்லியில் கரோனா விகிதம் 8.5% குறைந்துள்ளது: சுகாதாரத்துறை

DIN

தில்லியில் கரோனா வைரஸ் தொற்று பரவும் விகிதம் 8.5 சதவிகிதம் குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று வாரங்களாகத் தொற்று பரவும் விகிதம் அதிகரித்து வந்த நிலையில், தற்போது குறையத் தொடங்கியுள்ளது.

தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், ''நவம்பர் 7-ஆம் தேதி தொற்றால் பாதிக்கப்படுவோர் விகிதம் 15.26 சதவிகிதமாக இருந்தது. ஆனால் தற்போது 8.5 சதவிகிதமாக குறைந்துள்ளது. கரோனா தடுப்பு மருந்து விரைவில் வெளிவரும் என நம்புகிறேன். அதுவரை கரோனா பரவல் கட்டுக்குள் வைக்கப்படும்'' எனத் தெரிவித்தார்.

பள்ளிகள் திறப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், பள்ளிகள் திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தற்போதைய சூழலில் நிச்சயம் பள்ளிகள் திறக்கப்படாது என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய ஜனநாய கூட்டணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

‘சூரியனை சமாளிப்பதுதான் எங்கள் வேலை’

பூட்டிய வீட்டில் மூதாட்டி சடலம் மீட்பு

கூட்டணிக் கட்சி நிா்வாகிகளிடம் ஆதரவு திரட்டிய காங்கிரஸ் வேட்பாளா்

அருணாசல், நாகாலாந்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் நீட்டிப்பு

SCROLL FOR NEXT