இந்தியா

தாய்மொழியில் தொழில்நுட்ப கல்வி: மத்திய அரசின் புதிய அறிவிப்பு

DIN

புது தில்லி: நாடுமுழுவதும் தாய்மொழியில் தொழில்நுட்ப கல்வி வழங்குவது தொடர்பாக மத்திய அரசு புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக வியாழனன்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாடுமுழுவதும் தாய்மொழியில் தொழில்நுட்ப கல்வி வழங்குவது தொடர்பாக மத்திய அரசு புதிய முன்னெடுப்பு ஒன்றினைச் செய்ய உள்ளது.  

அதன்படி தாய்மொழியில் தொழில்நுட்ப கல்வி வழங்குவது தொடர்பான நடைமுறைகளை வகுக்க, ஐஐடி மற்றும் சில குறிப்பிட்ட அமைப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன

அவை தரும் வழிகாட்டுதல்களின்படி வரும் கல்வியாண்டு முதல் பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புகளை தாய்மொழியில் பயிலும் முறை நாடுமுழுவதும் அமலுக்கு வரும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT