இந்தியா

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாரிடம் சிபிஐ விசாரணை

DIN


பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமாரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
வருமானத்துக்கு அதிகமான வகையில் ரூ. 74.93 கோடி அளவுக்கு சொத்து குவித்துள்ளதாக காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார், அவரது குடும்பத்தினர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக, கர்நாடகம், தில்லி, மும்பையில் டி.கே.சிவகுமாருக்கு சொந்தமான 14 இடங்களில் கடந்த அக். 5-ஆம் தேதி சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். 
இந்த சோதனையின்போது, டி.கே.சிவகுமாரின் வீட்டில் இருந்து ரூ. 57 லட்சம் ரொக்கம், சொத்து ஆவணங்கள், வங்கிக் கணக்குகள், கணினி ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்களை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்திருந்தனர். 
இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிஐ, நவ. 23-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு நவ. 19-ஆம் தேதி சிவகுமாருக்கு அழைப்பாணை அளித்திருந்தது. ஆனால், நவ. 22-ஆம் தேதி முதல் மஸ்கி, பசவகல்யாண், பெல்லாரியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருப்பதால், நவ. 25-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராவதாக அவர் விடுத்திருந்த வேண்டுகோளை சிபிஐ அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர்.
அதைத் தொடர்ந்து, வடகர்நாடக சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு வியாழக்கிழமை காலை பெங்களூருக்கு வருகை தந்த டி.கே.சிவகுமார், அஜ்ஜையன மடத்துக்குச் சென்று வழிபட்டார். பின்னர், கங்கா நகரில் உள்ள சிபிஐ அலுவலகத்துக்குச் சென்ற டி.கே.சிவக்குமார், மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் உடலுக்கு அஞ்சலி செலுத்த தில்லி செல்ல வேண்டியுள்ளதால், விசாரணையை விரைவாக முடிக்கும்படி கேட்டுக்கொண்டார். இதைத் தொடர்ந்து, டி.கே.சிவக்குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் 45 நிமிடங்கள் விசாரணை நடத்தினர். தேவைப்படும்போது விசாரணைக்கு வரவேண்டும் என டி.கே.சிவகுமாரை சிபிஐ அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

அண்ணா பல்கலைக் கழகப் பதிவாளா் நியமனம்: துணை வேந்தா் விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

SCROLL FOR NEXT