இந்தியா

‘விவசாயிகள் மீதான தாக்குதல் நடவடிக்கை தவறானது’: தில்லி முதல்வர்

DIN

தில்லியை நோக்கிய விவசாயிகளின் பேரணியைத் தடுப்பதாகக் கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்துவது தவறானது என தில்லி முதல்வர் அரவிந்த கேஜரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

விவசாய உற்பத்தி, விநியோகம் மற்றும் சந்தைப்படுத்துதல் தொடர்பான 3 மாசோதாக்கள் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டு சட்டமாகியுள்ளன. இதற்கு நாடு முழுவதும் உள்ள விவசாய அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், விவசாய மற்றும் சமூக நல அமைப்புகள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றன. 

இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் ஹரியாணா வழியாக தில்லி நோக்கி பேரணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து அம்பாலாவில் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும் காவல்துறையினர் நீரை பாய்ச்சி விவசாயிகளை கலைத்தனர்.

தொடர்ந்து ஹரியாணா மாநிலத்திற்குள் விவசாயிகள் நுழையாமல் இருக்க மாநில எல்லைகள் மூடப்பட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தில்லி முதல்வர் அரவிந்த கேஜரிவால் மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்த சட்டங்களை திரும்பப் பெறுவதற்கு பதிலாக விவசாயிகளின் அமைதியான போராட்டங்களை தடுக்கின்றனர். அவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்படுகிறது. இது முற்றிலும் தவறானது. அமைதியாகப் போராடுவது விவசாயிகளின் அடிப்படை உரிமை” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

SCROLL FOR NEXT