இந்தியா

அகமது படேல் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

25th Nov 2020 11:54 AM

ADVERTISEMENT


புது தில்லி:  அகமது படேல் மறைவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தனது அதிகாரப்பூர்வ சுட்டுரைப் பக்கத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள தகவலில், "அகமது படேல் மறைவால் வருத்தம் அடைந்தேன். பொது வாழ்விலும், மக்கள் சேவையிலும், அவர் பல ஆண்டுகள் ஈடுபட்டவர். அவரது அறிவுக் கூர்மை, காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தியதில் அவரின் பங்கு எப்போதும் நினைவு கூறப்படும். அவரது மகன் பைசலிடம் பேசி இரங்கல் தெரிவித்தேன். அகமது படேல் ஆன்மா சாந்தியடையட்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் மூத்த தலைவா் அகமது படேல் இன்று அதிகாலை காலமானார். 

குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த காங்கிரஸ் எம்.பி.யான அகமது படேல் (71),  தனக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டிருப்பதாக, கடந்த அக்டோபா் 1-ஆம் தேதி சுட்டுரையில் அறிவித்திருந்தார். 

அதைத் தொடா்ந்து அவா் குா்கானில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது உடல்நிலை பின்னடைவைச் சந்தித்தது. இதனால், அவா் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். 

ADVERTISEMENT

எனினும், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3.30 மணியளவில் அவர் காலமானார். இத்தகவலை அவரது மகன் ஃபைசல் அகமது சுட்டுரையில் உறுதி செய்தார்.

மறைந்த அகமது படேல், காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகராகவும் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : modi pm modi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT