இந்தியா

கைது செய்தாலும் சிறையிலிருந்தபடியே வெற்றி பெறுவோம்: மம்தா

25th Nov 2020 03:02 PM

ADVERTISEMENT


பாஜக என்னைக் கைது செய்தாலும் சிறையிலிருந்தபடியே பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸை (டி.எம்.சி.) வெற்றி பெறச் செய்வேன் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

294 பேரவைத் தொகுதிகள் கொண்ட மேற்கு வங்கத்துக்கு ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில், கரோனாவுக்குப் பிந்தயைக் கால கட்டத்தில் முதல் பொதுக் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது:

"பாஜக அரசியல் கட்சியல்ல. அதுவொரு பொய்க் குப்பை. தேர்தல் வந்துவிட்டால், திரிணமூல் காங்கிரஸ் தலைவர்களை அச்சுறுத்துவதற்காக நாரதா ரகசிய விசாரணை மற்றும் சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கைக் கையிலெடுக்கும்.

ADVERTISEMENT

அதனால், நான் ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். பாஜக மற்றும் அதன் அமைப்புகளைப் பார்த்து எனக்கு பயமில்லை. அவர்களுக்கு தைரியம் இருந்தால் என்னைக் கைது செய்து சிறையில் அடைக்கட்டும். சிறையிலிருந்தபடியே தேர்தலை எதிர்கொண்டு, திரிணமூல் காங்கிரஸை வெற்றி பெறச் செய்வேன்.

லாலு பிரசாத் யாதவை அவர்கள் சிறையில் அடைத்தார்கள். இருந்தபோதிலும், அவரது கட்சி தேர்தலில் சிறப்பாக செயல்பட்டுள்ளது. பிகாரில் பாஜக கையாளுதல் மூலமே வெற்றி பெற்றது. மக்கள் அளித்த தீர்ப்பினால் வெற்றி பெறவில்லை. 

சிலர் பாஜக ஆட்சிக்கு வரும் என்கிற மாயையில் உள்ளனர். சிலர் வாய்ப்புகளைப் பயன்படுத்த முயற்சிக்கின்றனர். பாஜக ஆட்சிக்கு வருவதற்கான எவ்வித வாய்ப்பும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறேன். மாபெரும் வெற்றியுடன் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம்" என்றார் மம்தா.
 

Tags : west bengal
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT