இந்தியா

மேற்குவங்கத்தில் பாஜக ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது: மம்தா பானர்ஜி

25th Nov 2020 03:13 PM

ADVERTISEMENT

மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வர எந்தவித வாய்ப்பும் இல்லை என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

2021 ஏப்ரல் - மே மாதங்களில் மேற்குவங்க மாநிலத்துக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து பங்குரா பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள முதல்வர் மம்தா பானர்ஜி, பாஜகவை 'பொய்களின் குப்பை' மற்றும் 'நாட்டின் மிகப்பெரிய சாபம்' என்று குற்றஞ்சாட்டினார். 

மேலும் பேசிய அவர், 'திரிணமூல் எம்.எல்.ஏக்களுக்கு பாஜக லஞ்சம் கொடுக்க முயன்று அவர்களை வேட்டையாட முயற்சித்து வருகிறது. காவிக் கட்சி ஆட்சிக்கு வரும் என்று சிலர் மாயையில் இருக்கிறார்கள். 

பாஜக ஒரு அரசியல் கட்சி அல்ல, பொய்களின் குப்பை. தேர்தல் வரும்போதெல்லாம், அவர்கள் திரிணமூல் கட்சித் தலைவர்களை அச்சுறுத்துவதற்காக நாரடா (ஸ்டிங் ஆபரேஷன்) மற்றும் சாரதா (மோசடி) பிரச்னைகளை கொண்டு வருகிறார்கள்.

ADVERTISEMENT

ஆனால் நான் அவர்களுக்கு மிகத் தெளிவாகச் சொல்கிறேன், நான் பாஜகவோ அல்லது அதன் ஏஜென்சிகளைப் பற்றி பயப்படமாட்டேன். அவர்களுக்கு தைரியம் இருந்தால், அவர்கள் என்னைக் கைது செய்து என்னை சிறைக்குப் பின்னால் நிறுத்தலாம்.

சிறையிலிருந்து தேர்தல்களில் போராடி கட்சியின் வெற்றியை உறுதி செய்வேன்' என்று பேசினார். 

சமீபத்தில் முடிவடைந்த பிகார் தேர்தலைப் பற்றி குறிப்பிடுகையில், ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூட சிறையில் அடைக்கப்பட்ட நிலையிலும், அவர் தனது கட்சியின் நல்ல செயல்திறனை உறுதி செய்து வருகிறார்.

எனவே, மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வர எந்தவித வாய்ப்பும் இல்லை. நாங்கள் கூடுதல் சக்தியுடன் ஆட்சிக்கு மீண்டும் வருவோம் என்றார். 

கடந்த 2011 முதல் மேற்குவங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. 

Tags : west bengal
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT