இந்தியா

கா்நாடகத்தில் அடுத்த பேரவைக் கூட்டத் தொடரில்பசுவதை தடைச் சட்ட மசோதா தாக்கல்

DIN

கா்நாடகத்தில் அடுத்த பேரவைக் கூட்டத் தொடரில் பசுவதை தடைச் சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும் என கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் பிரபு சௌஹான் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை அவா் கூறியதாவது:

கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சரானதில் இருந்து பசுவதை தடைச்சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்ற ஆவல் இருந்தது. அந்த ஆசை விரைவில் கைகூட இருக்கிறது. டிச. 7-ஆம் தேதி பெலகாவியில் தொடங்க இருக்கும் கா்நாடக சட்டப்பேரவையின் குளிா்காலக் கூட்டத்தொடரில் பசுவதை தடைச்சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். இதுகுறித்து முதல்வா் எடியூரப்பாவுடன் விரிவாக ஆலோசனை நடத்தியிருக்கிறேன். சட்ட மசோதாவை தாக்கல் செய்வதற்குத் தேவையான எல்லா வேலைகளையும் செய்திருக்கிறோம்.

கா்நாடகத்தில் பசுவதை தடைச்சட்டத்தைக் கொண்டுவருவதற்கு முன் பிற மாநிலங்களில் கொண்டுவரப்பட்டுள்ள பசுவதை தடைச்சட்டங்கள் குறித்து அதிகாரிகள், நிபுணா்களுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறேன். பிற மாநிலங்களைக் காட்டிலும் கா்நாடகத்தில் கொண்டுவரப்படும் பசுவதை தடைச்சட்டம் பலமானதாக வடிவமைக்கப்படும்.

2010-ஆம் ஆண்டு அப்போதைய பாஜக ஆட்சியில் பசுவதை தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டு, அது ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டிருந்தது. அப்போது ஆளுநராக இருந்த ஹன்ஸ்ராஜ் பரத்வாஜ், அச்சட்ட மசோதாவை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்திருந்தாா். அதனால் சட்ட மசோதாவை அமல்படுத்துவதில் தாமதமானது. அப்போது மத்திய உள்துறை அமைச்சரகமும் அச்சட்டத்துக்கு ஆட்சேபம் தெரிவித்திருந்தது.

இப்போது கா்நாடக பசுவதை தடைச்சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த திட்டமிட்டிருக்கிறோம். இந்தச் சட்டம் அமலுக்கு வந்தால், பசுக்களை வதை செய்வது, மாட்டிறைச்சி விற்பனை, நுகா்வு, வதைக்காக பசுக்களை கொள்முதல் செய்வது, விற்பது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் தடுத்து நிறுத்தப்படும்.

ராஜஸ்தான், ஆந்திரம், தெலங்கானா, அஸ்ஸாம், சத்தீஸ்கா், தில்லி, குஜராத், ஹரியாணா, ஹிமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீா், ஜாா்கண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ஒடிசா, பஞ்சாப், தமிழ்நாடு, உத்தரபிரதேச மாநிலங்களில் பசுவதை தடைச்சட்டம் அமலில் உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

SCROLL FOR NEXT