இந்தியா

140 கிலோ கஞ்சா கடத்தல்: கேரளாவில் மூவர் கைது

25th Nov 2020 05:03 PM

ADVERTISEMENT

 

கொச்சி: 140 கிலோ கஞ்சா கடத்தியது தொடர்பாக கேரள மாநிலம் கொச்சியில் மூவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய நகரம் கொச்சி. இந்நகரத்தின் அருகே உள்ள அங்கமாலி மற்றும் பெரும்பாவூர் ஆகிய இடங்களில் புதனன்று போலீசார் நடத்திய சோதனையில் 140 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் அந்த கஞ்சவானது ஆந்திர மாநிலத்தில் இருந்து கேரளாவின் இடுக்கி மாவட்டத்திற்கு கடத்திச் செல்லப்பட இருந்தது கண்டறியப்பட்டது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT